சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
World

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர் சாதனை

பகிர: Facebook WhatsApp X Telegram
சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.

அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.

இவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது என்பது மாலெதிக தகவல்.

இந்த தமிழனின் சாதனைகளால் உலகத்தில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களிற்கும் பெருமை.

இந்த நிலையில் அவரின் சாதனைக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்