புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பிலான நீண்ட நாள் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த முக்கியஸ்தர்

பகிர: Facebook WhatsApp X Telegram
விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பிலான நீண்ட நாள் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த முக்கியஸ்தர்

ஊர்மிளாவின் காதலை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட்ட மத்திய குழுவே ஏற்கவில்லை. அங்கு ஏற்பட்டது வெறும் காதல் பிரச்சனை அல்ல என விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தேவரன்ன தனது முகநுால் பதிவில் முறிப்பிட்டுள்ளார்.

மொட்டை மாடியில் ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாகப் படுத்திருந்ததை நாகராஜா வாத்தியும் கலாபதியும் நேரடியாக கண்டு அதனை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்த பின் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு உமாமகேஸ்வரன் கேட்கப்பட்டார்.

முதலில் நடந்ததை ஒப்புக்கொண்ட உமாமகேஸ்வரன் பின் ஊர்மிளாவோடு பேசிவிட்டு வந்து அதனை மறுதலித்துள்ளார்.

கணேசன் ஐயர் எழுதிய நூலில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கண்ணால் கண்ட ஒரு சாட்சி கலாபதி லண்டனில் உள்ளார்.நாகராஜா வாத்தி என குறிப்பிட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தேவரன்ன

மற்றும் ஐயர் ஆகியோர் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஊர்மிளாவின் காதலை அல்லது உடல்உறவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல மத்தியகுழு உறுப்பினர்கள் மாத்திரமன்றி அப்போது தமிழ்நாட்டில் வாழ்ந்த இயக்க உறுப்பினர்கள் யாருமே விரும்பவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

பின் ஊர்மிளாவுக்கு என்ன நடந்தது கொலை செய்யப்பட்டாரா?

கரு கலைப்பு காரணமாக வவுனியாவில் இறந்ததாக அறிந்தேன். ஆனால் ஊர்மிளா இறந்தவுடன் அப்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த உமா மகேஸ்வரன் தமிழகத்தில் உள்ள ஒருவர் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பிரபாகரன் ஊர்மிளாவைக் கொலை செய்துவிட்டார் என தந்தி அடிப்பித்திருந்தார் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்