சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது யார்? வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன் கஜேந்திரகுமாரிடம் சிவாஜிலிங்கம் கேள்வி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சிவாஜியின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோட்டபாயவுக்கு பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

அத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என கணக்கிட்டுள்ள பசில், அவருடன் இணைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிபால அமரசிங்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் சிறிபால அமரசிங்க, பசில் ராஜபக்சவின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சிறிபால அமரசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்