கோட்டா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திரிகாவின் அறிவிப்பு

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீ.ல.சு.க.யின் பல தேர்தல் அமைப்பாளர்கள் எதிர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கோட்டாவுக்கு தனது ஆதரவை வழங்கப்போவதில்லை என சந்திரிக்கா கூறிய நிலையில் சந்திரிகா, எதிர்கால நிலைப்பாடு ஏதும் அறிவிக்காமல் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அக்கட்சியின் அமைப்பாளர்கள் எதிர்கால நடவடிக்கை குறித்து தீவிரமாக குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.