சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

மோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் திடீர் என வெளியிடப்பட்ட அதிரடி தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 179.9830 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலருடன் ஒப்பிடும் போது, ரூபாயின் பெறுமதி இந்த வருடத்தில் நூற்றுக்கு 3.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்