இளைஞனின் நினைத்துப் பார்க்கவும் முடியாத வெறிச் செயல்!

பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டு முடியாமல் போன கோபத்தில், இரும்புக் கம்பியொன்றை அப்பெண்ணின் பிறப்புறுப்பினுள் செலுத்திக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

பீஹார் தலைநகர் பாட்னாவின் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த முப்பத்தைந்து வயதுப் பெண். திருமணமான இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவர் கூலித் தொழிலாளி.

அதே கிராமத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் (22) என்ற இளைஞன் அடிக்கடி இந்தப் பெண்ணிடம் பாலியல் சேட்டைகளை விட்டிருக்கிறார்.

அண்மையில் ஒருநாள், வெளியே சென்றிருந்த அந்தப் பெண் வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கே வந்த தீரஜ்குமார், அவரைக் கீழே தள்ளி வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

எனினும், அந்தப் பெண் அதற்கு இடம் கொடுக்காமல் மல்லுக்கட்டவே தீரஜ் குமாரின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தீரஜ்குமார், அருகே இருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அப்பெண்ணின் பிறப்புறுப்பினுள் செலுத்தினார். தாங்க முடியாத வலியில் துடித்த அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் கடும் இரத்தப் போக்கு ஏற்பட்டது.

இதைக் கண்டு பயந்த தீரஜ்குமார் அங்கிருந்து தலைமறைவானார்.

எப்படியோ வீடு வந்து சேர்ந்த அந்தப் பெண், உறவினர்களிடம் நடந்த விடயத்தைக் கூறியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று புகார் பதிவு செய்தனர்.

அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண், கடும் இரத்தப் போக்கினால் உயிரிழந்தார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீரஜ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை வேகமாக முடித்து கடுமையான தண்டனை வாங்கித் தருவதாகவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like