புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சியில் கடத்தப்பட்டு 3 மணித்தியாலத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவி! பொலிஸாரின் அசமந்த போக்கு!

பகிர: Facebook WhatsApp X Telegram
எச்சரிக்கை: இதயம் பலவீனமானோர் பார்க்கவேண்டாம்! யாழில் இன்று காலை நடந்த அனர்த்தம்!!

கிளிநொச்சியில் மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசமந்தம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி பாடசாலை மேலதிக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த மாணவி, காரில் வந்த சிலரால் கடத்தப்பட்டார்.

சுமார் 3 மணிநேரங்களின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்த முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இலக்கம், கடத்திய நபர் ஒருவரின் புகைப்படம், தொலைபேசி இலக்கம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

எனினும் போதுமான ஆதாரங்கள், தடயங்கள் இருந்தும் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட எவரும் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து தாம் பொலிஸாரிடம் வினவியபோதும் அவர்கள் அலட்சியமாக பதில் தருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய பொலிஸாருக்கு எதிராக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்