புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கோட்டாபயவின் உத்தரவை உடன் நடத்திக் காட்டிய டக்ளஸ்

பகிர: Facebook WhatsApp X Telegram
கோட்டாபயவின் உத்தரவை உடன் நடத்திக் காட்டிய டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாளியாவத்தையிலல் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் குறித்த அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார்.

முன்பதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டு மணித்தியாலங்களில் அனைவரும் தத்தமது அமைச்சுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த உத்தரவை விடுத்தார் அதனை முதலில் நடைமுறைப்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்