செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

கோட்டாபயவிடம் இருந்து பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
கோட்டாபயவிடம் இருந்து பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில் அனுக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளது பிள்ளையான் உட்பட பிள்ளையானின் ஆதரவாளர்களிற்கு இந்த செய்தி பேரிடியான தகவல் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துறை சந்திரகாந்தனை சந்தித்து நலன் விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்