ஜனவரி 1 முதல் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வருமான வரியை நீக்குவதற்கான சலுகை ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தும் வரி உள்ளிட்ட நேரடி வரி சலுகைகள் அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாதமொன்றுக்கு ரூ .250,000 வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. மாறாக 250,000 க்கும் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

அதேவேளை , வற் உட்பட பிற வரி சலுகைகள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.