சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Srilanka

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம்! இராணுவச் சிப்பாயை நையப்புடைத்த மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம்! இராணுவச் சிப்பாயை நையப்புடைத்த மக்கள்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலிற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்

பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்