நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமல் பிரதமர் பதவியை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை- மஹிந்த ராஜபக்ஷ
ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்றது உள்ளூராட்சி தேர்தல் மாத்திரமே தவிர பிரதமரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவில்லை என்பதனால், மஹிந்த ராஜபக்ச அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.எப்படியிருப்பினும், எதிர்க்கட்சி தலைமை பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.





