செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

யாழ்.சித்தன்கேணியில் நண்பகல் நிகழ்ந்த அனர்த்தம் – பறிபோனது முதியவரின் உயிர்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்.சித்தன்கேணியில் நண்பகல் நிகழ்ந்த அனர்த்தம் – பறிபோனது முதியவரின் உயிர்

யாழ்ப்பாணம் சித்தன்கேணிப்பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற அனர்த்தத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்ணன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகமொன்றில் மதிய உணவை எடுத்துக்கொண்டு துவிச்சக்கரவண்டியில் ஏற முற்பட்டவேளை அவ்வீதி வழியாக வந்த உழவு இயந்திரம் வேககட்டுப்பாட்டை இழந்து முதியவர் மீது மோதி அருகிலுள்ள கடைக்குள் புகுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்