ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Srilanka

கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (மார்ச் 20) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 71பேர்) அதிகரித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 218 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 300 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்