வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு சதவீதங்கள்

2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி முதல் ஐந்து மணி வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஐந்து மணிவரை நாடளாவிய ரீதியில் சுமார் 70 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் 23 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்களும் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதிகளை உள்ளடக்கிய பல தேர்தல் மாவட்டங்களில் பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

  TOTAL POLLED PERCENTAGE (2015) TOTAL POLLED PERCENTAGE (2020)
Jaffna 61.56% 67%
Vanni 71.89% 74%
Digamadulla 73.99% 73%
Trincomalee 74.34% 74%
Batticaloa 69.12% 76%