புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

வடக்கின் 5 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் நியமனம் – ஜனாதிபதி அதிரடி

பகிர: Facebook WhatsApp X Telegram
வட மாகாண ஆளுநரை நியமிப்பதில் தொடரும் குழப்பம்! அமைச்சரவையில் நேற்று நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக காதர் மஸ்தானும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அவரது நியமனம் தொடர்பில் மாவட்ட செயலகத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்