செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Health

தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓடுவதனால் இவ்வளவு நன்மைகளா….? எத்தனை பேருக்கு தெரியும்…?

பகிர: Facebook WhatsApp X Telegram
தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓடுவதனால் இவ்வளவு நன்மைகளா….? எத்தனை பேருக்கு தெரியும்…?

சைக்கிள் ஓட்டுவதில் பிரியமுடையவராக இருந்தாலும் சரி, புதிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்பவராக இருந்தாலும் சரி, நீங்கள் சில விடயங்களை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

01.முதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது சிறந்தது.

02. காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண்பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல் எளிதில் சோர்வடைந்து விடும்.

03.சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.

 

04. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையில் சமன் செய்ய உதவும்.

தளர்வான உடைகள், தரமான காலணிகளை அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.

05. போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல் மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

06.ஓய்வுநேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் இரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.

07. தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி பெறும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும்,உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்