அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த யாழ். இளைஞன்!

லங்கா பிரிமியர் லீக்கில் இன்றைய போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சல் மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார்.

சர்வதேச வீரர்களுடன் தனது முதலாவது போட்டியில் விளையாடிய அவர் அஞ்சல் மத்யூசின் விக்கெட்டை வீழ்த்தி பெருமையடைந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அவர் இன்று இடம்பெறும் கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டான்லியஸ் அணியில் விளையாடுகிறார்.

4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது பந்தில் பாகிஸ்தான் வீரர் சொகைப் மலிக்கிடம் பிடிகொடுத்து மத்யூஸ் ஆட்டமிழந்தார்.