திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மட்டக்களப்பில் தீவிரமடையும் கொரோனா தொற்று! வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டன

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பில் தீவிரமடையும் கொரோனா தொற்று! வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டன

மட்டக்களப்பு நகரில் இன்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இதுவரை 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான அன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி வர்த்தகர்கள் 553 பேரிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 22 பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்களெனவும் தெரியவந்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பணிபுரியும் 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram