திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!

பகிர: Facebook WhatsApp X Telegram
சின்ன வெங்காயத்தினை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டலாமா? யார் யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம் தெரியுமா?

சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை எனவும் நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சின்ன வெங்காயத்தின் மொத்த கொள்வனவு விலை அதிகரித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram