திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகர்; அவரது உடமைகளை சோதனை செய்தபோது காத்திருந்த ஆச்சர்யம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகர்; அவரது உடமைகளை சோதனை செய்தபோது காத்திருந்த ஆச்சர்யம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் உடமையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிசிச்சை பெற்று வந்த குறித்த யாசகர் இன்று மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயம், வங்கிகளுக்கு முன்னால் யாசகம் பெற்று வந்தவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் யாசகர் மரணித்த பின்னர் அவர் வைத்திருந்த பழைய பைகளில் ஒரு இலட்சத்துமுப்பதாயிரத்துக்கு மேல் பணம் இருந்தமை வைத்தியசாலையால் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழந்தவரின் உறவினர்கள் தொடர்பில் எந்தவிபரமும் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram