திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

தமிழ் – சிங்கள பெண்களை தகாதமுறையில் விமர்ச்சித்த முஸ்லிம் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பகிர: Facebook WhatsApp X Telegram
தமிழ் – சிங்கள பெண்களை தகாதமுறையில் விமர்ச்சித்த முஸ்லிம் இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த நிலையில் பஸ்லுல்லாஹ் முபாரக் எனும் முஸ்லிம் இளைஞன், கடந்த சில தினங்களின் முன்னர் பெண்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அவர் தற்போது குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முஸ்லிம் இளைஞன் தனது முகநூலில் ஒரு பதிவொன்றை பதிவிட்டுள்ளார், அதில் ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்டார், ஏன் முஸ்லிம் பெண்கள் தமது உடலில் பெரும் பகுதியை மறைக்கிறார்கள் என்று? கேட்டதற்கு அவர் தகாத முறையில் தமிழ், சிங்கள, இந்து, கிறிஸ்தவ பெண்களை சாடி பதிவொன்றினை இட்டிருந்தார்.

ஒரு ஊடகத்தில் பணிபுரிந்துகொண்டு, அதுவும் தமிழ் பெண்களுடனும் சிங்களப்பெண்களுடனும் பணிபுரிந்துகொண்டு , இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தமை இலங்கை சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த தொலைக்காட்சி நிறுவனம்,அவரை பணியிடை நீக்கம் செய்திருந்த நிலையில், மீண்டும் பணியில் அமர்த்த நிறுவனம் முன்வராத நிலையில் வேறு வழியின்றி அவரே விலக்கிக்கொண்டதாக அறியமுடிகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram