திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளதுடன், 5 உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில் ஒருவருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 4 பேருக்கும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் உட்பட 15 பேருக்கு புதிதாக தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 215 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 222 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram