திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

மட்டக்களப்பு வீதியோரத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பு வீதியோரத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கறுவாக்கேணியைச் சேர்ந்த வே.தங்கராசா வயது (58) என்ற 4 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று காலை வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்து வைத்திருந்திருந்த ஒரு இலட்சம் ரூபா பணத்தில் கடன் செலுத்த வேண்டுமென கூறி 95,000 ரூபாவை பெற்றுச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், வீட்டின் முன் வீதியில் ஓரத்தில் தேங்கி நின்ற வெள்ள நீரில் முகம் குப்பற கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் சடலம் உடற் கூற்று ஆய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram