திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

பாம்பை மீன் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
பாம்பை மீன் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்றவரால் பரபரப்பு

புதிய இனம் மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கடல் பாம்பு ஒன்றை கொண்டு சென்ற சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை குறித்த நபர் கொண்டு சென்றுள்ளார்.

அத்தோடு தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என கூறியுள்ளனர்

மேலும் குறித்த கடல் பாம்பு 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்டது எனவும் கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram