திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கிழக்கிலேயே பேரணிக்கு எதிர்ப்பு இல்லை; கிளிநொச்சியிலோ, யாழிலிலோ இடம்பெற அனுமதிக்காதீர்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிழக்கிலேயே பேரணிக்கு எதிர்ப்பு இல்லை; கிளிநொச்சியிலோ, யாழிலிலோ இடம்பெற அனுமதிக்காதீர்கள்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் பல தடைகளையும் தாண்டி மக்கள் பேரணி பேரெழுச்சி கொண்டு பொதுவிலில் இருந்து ஆரம்பமாகி கிழக்கின் ஊடாக சென்றபோது பேரணிக்கு எதிர்ப்பு காட்டப்படவில்லை.

இந்நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற கைங்கரியம் போல் கிளிநொச்சியிலோ, யாழிலிலோ இடம்பெற தயவுசெய்து அனுமதிக்காதீர்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழ் தேசியம் சாராத கட்சி,உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள் நாளை இப்பேரணி முடியும்வரையாவது தமிழர் என்ற உணர்வுடன் செயற்படுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் நீங்கள் பங்குபற்றாவிட்டாலும் எதிர்ப்புகளில் ஈடுபட்டு கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும், போரின் பின்னரான மிகப்பெரும்தமிழ் மக்கள் திரட்சியை அகிலமே அவதானிக்கட்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram