திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

சிறைச்சாலைகளில் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
சிறைச்சாலைகளில் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளாதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், வைரஸ் தொற்று காரணமாக புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் நேற்றைய தினம் புதிதாக மூன்று தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் விளக்கமறியல் பெண் கைதிகளாவர்.

இதன்போது, வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 22 அதிகாரிகள் உட்பட 168 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 132 அதிகாரிகள் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4,516 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை சிறைச்சாலைகளில் இதுவரையில் 154 அதிகாரிகள் உட்பட 4,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram