ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

இலங்கையில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட அவலநிலை!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட அவலநிலை!

இலங்கையில் அண்மைக் காலமாக சீன மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

எனினும் தற்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதையும், அதற்கு பதிலாக சீன மொழி திணிக்கப்படுவதையும் காணலாம்.

கடந்த காலங்களில் இடங்களுக்குரிய பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கும்.

ஆனால் தற்போது சிங்களம், ஆங்கிலம், சீன மொழி காணப்படுகின்றது.

அதிலும் ஏனைய மொழிகளை விட சீன மொழியே மேலாக முதலில் எழுதப்பட்டுள்ளது.

பெயர் பலகை மாத்திரம் அல்லாது பேருந்துகளிலும் சீன மொழியே எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனர்களை விட ஏனைய மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர்.

அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது என்பதை விடவும், தமிழ் மொழி முற்றிலும் தவறுதலாக எழுதப்பட்டுள்ளதோடு, சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram