ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
World

சண்டையிட்ட நபரை முத்தமிடுவதுபோல் நாக்கை கடித்து துப்பிய பெண்.. வழக்கில் புதிய திருப்பம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
சண்டையிட்ட நபரை முத்தமிடுவதுபோல் நாக்கை கடித்து துப்பிய பெண்.. வழக்கில் புதிய திருப்பம்!

சண்டையிட்ட ஆண் நபரின் ஒருவரின் நாக்கை முத்தமிடுவதுபோல் நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்ணின் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கடந்த 2019-ம் ஆண்டு எடின்பர்க் பகுதியில் ஜேம்ஸ் மெக்கென்சி எனபவர் பெத்தானே ரியான் என்ற பெண்ணிடம் ரோட்டில் சண்டையிட்டுள்ளார்.

அப்போது அந்த சண்டையில், பயங்கர கோபமுற்ற ஜேம்ஸ் மெக்கென்சி, ரியானை அடிக்க பாய்ந்துள்ளார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பெண்ணான ரியான், ஜேம்ஸை கீழே தள்ளி உதட்டில் முத்தமிட்டுக் கொண்டே அவரது நாக்கை அழுத்தமாக கடித்து நாக்கில் இருந்து ஒரு பகுதியை கீழே துப்பியுள்ளார்.

இதனையடுத்து, வழியில் கதறிய அவரின் நாக்கை ஒரு பறவை எடுத்து செல்ல, ஜேம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தாலும் நாக்கு இல்லாததால், எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விட்டது.

இதனால், வாழ்நாள் முழுவதும் நாக்கில் பாதி இல்லாமலே தான் ஜேம்ஸ் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான ரியான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன் பின் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீல் மார்ட்டின், சம்பவம் நடந்த அன்று எனது கட்சிக்காரர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram