புதன், நவம்பர் 25, 2026
Breaking
World

170 ஆண்டுகளான மாயமான பறவை.. திடீரென தோன்றியதால் ஆச்சரியத்தில் ஆர்வலர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
170 ஆண்டுகளான மாயமான பறவை.. திடீரென தோன்றியதால் ஆச்சரியத்தில் ஆர்வலர்கள்

170 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை ஒன்று திடீரென தோன்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் காலப்போக்கில் இயற்கை, தட்பவெட்ப சூழல் மாற்றங்கள், வேட்டை ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்துள்ளன.

மேலும், பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்நிலையில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட பறவை ஒன்று மீண்டும் தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆசிய பகுதிகளில் காணப்பட்ட Black Browed Babbler என்ற பறவை கடந்த 170 ஆண்டுகளாக தென்படாத நிலையில் அந்த பறவை இனமே அழிந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் நம்பி வந்தனர்.

ஆனால், இந்தோனேஷியாவின் காட்டுப்பகுதியில் இந்த வகை பறவைகள் சில அரிதாக தோன்றியுள்ளன.

இதை கண்ட இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் இயற்கையின் ரகசியங்கள் குறித்தும் வியப்படைந்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram