திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Breaking

கொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்

கொழும்பு- வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளவத்தை, W.D சில்வா மாவத்தைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனத்தின் சாரதி ஹொக்கி ஸ்டிக் ஒன்றுடன் தனது வாகனத்தில் இருந்து இறங்கி, பேருந்து சாரதி உரிய முறையில் வாகனம் ஓட்டவில்லை எனவும், தனது சமிக்ஞைகளை கவனிக்காமல் பேருந்து ஓட்டியமையினாலும் மோட்டார் வாகன சாரதி கோபமடைந்துள்ளார்.

இதன்போது பேருந்தினை கடுமையாக தாக்கியுள்ளதுடன் சாரதிக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிமையினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram