திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை

பகிர: Facebook WhatsApp X Telegram
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை

வரும் சனிக்கிழமை முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram