திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

சென்னை செல்லக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்; யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவை

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழிலிருந்து சென்னை செல்ல தயார் நிலையில் விமானங்கள்; தற்போது வெளியானது புதிய தகவல்!

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இரத்மலானை- யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் செலவில், புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை இந்திய உயர்ஸ்தானிகருடன் இணைந்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில். கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram