திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

சீனாவிடம் விரைந்து சென்ற இலங்கை!

பகிர: Facebook WhatsApp X Telegram
சிங்களவர்களுக்கு  புரியவைக்க முடியுமா?

இலங்கை தேசிய கொடி அச்சிடப்பட்ட பாதணி மற்றும் கால்துடைப்பான் விரிப்புகள் அமேசான் ஒன்லைன் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகியுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட, வீட்டு வாசல்களின் கால்துடைப்பம் உற்பத்தியாளரை தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியக் கொடியை வீட்டு கால்துடைப்பமாக விளம்பரம் செய்வது குறித்து வெளியுறவு செயலாளர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் வோஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் அமேசானுடன் இந்த விஷயத்தைப் பின்தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram