திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

வவுனியாவில் இடம் பெற்ற பதை… பதைக்கும் சம்பவம்: பெற்ற பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியாவில் இடம் பெற்ற பதை… பதைக்கும் சம்பவம்: பெற்ற பிள்ளைக்கு தாய் செய்த கொடூரம்

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை புதைத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 பெண்ணே கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

குறித்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில், பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தான் குழந்தையைப் பிரசவிக்கவில்லை என தாய் தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தாயாரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இதேவேளை கைதான பெண் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram