திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கிளிநொச்சியில் மினி சூறாவளி; வீடுகள் சேதம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் மினி சூறாவளி; வீடுகள் சேதம்

கிளிநொச்சியில் இன்று மதியம் 1 மணியளவில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு தற்காலிக வீடுகள் முழுமையாகவும் மூன்று நிரந்தர வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் தொடர்பாக அறவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram