திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

பசறை கோர விபத்து – தப்பிச் சென்ற டிப்பர் வண்டி சாரதி கைது

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து – 14 பேர் பலி – 31 பேர் படுகாயம் (PHOTOS)

பசறையில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய அவர் சந்தேகத்தின் பேரில் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி அந்த சந்தர்ப்பத்தில் மதுபானம் அல்லது போதை பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பலரிடம் வாக்குமூலம் பெற முடியாத அளவிற்கு அவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்ப ரீதியான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram