திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்; பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்; பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

கடந்த சனியன்று பசறையில் இடம்பெற்ற கோரவிபத்து 15 உயிர்களை பலிவாங்கியது.

அந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின், ஏதுமறியா குழந்தை ஒன்று கேட்ட கேள்வி பலரின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது. ஏனெனில் அதற்கான பதில் யாரிடமும் இல்லை.

தனது தாய் தந்தை ஏன் இவ்வளவு அழகாக உடுப்பு உடுத்தி தூங்குகின்றார்கள்? எப்போது எழுவார்கள் என கேட்கும் ஏதுமறியா அந்த குழந்தைக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்.

எனவே தயவு செய்து சாரதிகளே நீங்கள் செல்லுமிடத்திற்கு சிறிதுநேரம் தாமதமானாலும் பரவாய் இல்லை. மிதமிஞ்சிய வேகம் பயணத்திற்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

முகமறியா எத்தனையோ உயிர்கள் உங்களை நம்பி தங்கள் பயணத்தை தொடர்கின்றார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் நாம் திரும்ப வரமாட்டோம் என யாரும் சொல்லிவிட்டு வருவதில்லை.

இன்னுமொரு இதொபோன்ற விபத்து வேண்டாமே….

போன உயிர்கள் திரும்பப்போவதில்லை.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram