ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

வவுனியா வைத்தியசாலை தாதியருக்கும் உறுதியானது கொரோனா தொற்று!

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியா வைத்தியசாலை தாதியருக்கும் உறுதியானது கொரோனா தொற்று!

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமை புரியும் தாதி ஒருவருக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் அவருடன் நெருங்கிப்பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாதியர்களுடன் தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram