வெள்ளி, ஒக்டோபர் 30, 2026
Breaking
Srilanka

நாட்டில் மீண்டும் பயணத்தடை; இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
மேலும் 175 பேருக்கு கோவிட்; 90,375ஆக உயர்ந்த பாதிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் , மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த பயணத் தடைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram