கரும்புள்ளியை போக்க அடித்து விரட்ட வெங்காயமும் பூண்டும் போதும்! இப்படி யூஸ் பண்ணுங்க

முகத்தை என்ன தான் மேக் அப் போட்டு அழகுப்படுத்தினாலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் தனியாக தெரியும்.

சருமப்பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தீர்வு உண்டு. அதை சரியான முறையில் பாதுகாப்பாகவே எப்படி கையாள்வது என்பதை பார்த்து வருகிறோம்.

எளிமையான ஃபேஸ் பேக் வகைகளை கொண்டு எப்படி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்குவது என்பதை பார்க்கலாம்.

​வெங்காயம், பூண்டு ஃபேஸ் பேக்

  1. வெங்காயம் – சிறியது 1
  2. பூண்டு பல் – 1

வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் ஒன்றாக அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகளில் தடவி அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பிறகு முகத்தை கழுவி விடவும். அதன் பிறகு எரிச்சல் இல்லாமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஒரு முறை இதை செய்தால் போதும்.