ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Breaking

சுவிற்சர்லாந்தில் பலரின் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

பகிர: Facebook WhatsApp X Telegram
சுவிற்சர்லாந்தில் பலரின் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.

அந்தத் தனித்துவமான உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பவர் எமது கூர் மாநிலத்தின் கண்ணன் எல்லோராலும் அழைக்கப் படும் (Kailainathan Thiyagarajah)

இங்குள்ள உணவகத்தில் உணவு பரிமாற்றம் என்பது, ஒரு மருத்துவருக்கு நிகரான பொறுப்புணர்வோடும், அழகியற் கலைஞனுக்கே உரிய கற்பனைவளத்துடனும் மேற்கொள்ள வேண்டியது.

அந்த அரிய பணியை ஆற்றும் கலைஞனை, தமது ஆண்டு மலரில் கௌரவித்திருக்கிறது Glacier Express. திசாலனின் 31ம் நாள் புண்ணியாகவசனம், நாமகரண கிரிகைகளில் எம்முடன் இருந்தவாறே தொலைபேசி வழியாக பணிக்கான ஆயத்தங்களை உதவியாளருக்குச் சொல்லிக் கொண்டிருந்த கண்ணனைக் காணும்போதே, அவனது பணிமீதான காதலும், கடமை உணர்வும், உயர்வுகளைத் தரும் என்பது புரிந்தது. என்பதுடன் கண்ணனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram