சனி, நவம்பர் 14, 2026
Breaking
செய்திகள்

இலங்கையில் பரவும் வைரஸ் தொற்று – நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பகிர: Facebook WhatsApp X Telegram
அமெரிக்காவின் இராணுவத்தளமாக இலங்கை – இந்தியாவுக்கு காத்திருக்கும் பேரிடி..!

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோய்கள் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருதாகவும் அது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளது.

கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவ்வாறானவரகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் அவர் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram