சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்மம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா

யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை – உயரப்புலம் பகுதியில் இன்றைய தினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த கைது நடவடிக்கை இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram