சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் உட்பட பல இடங்களில் மழை : பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

இன்று (08) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram