சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

4 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை

பகிர: Facebook WhatsApp X Telegram
அடுத்த ஆண்டு கல்வி முறையில் மாற்றம் – உள்வாங்கப்படவுள்ள பாடசாலைகள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07) முதல் விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை குறையும் வரை விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள்
இதன்படி புலத்சிங்கள ஹல்வதுர தமிழ்க் கல்லூரி, பரகொட கித்துலகொட கனிஷ்ட கல்லூரி, மேல் வெல்கம கனிஷ்ட கல்லூரி, மத்துகம பிரதேசத்தின் மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 4ஆம் திகதி தொடக்கம் மழை ஆரம்பிக்கும் நேற்றைய தினம் (7ஆம் திகதி) வரை வெள்ள நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இல்லை என புலத்சிங்கள பிரதேச செயலாளர் ரங்கன பிரசாத் பெரேரா தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram