சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையின் வடக்கில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…உருவாகும் புதிய தாழமுக்கம்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 25 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram