சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர பாடசாலை மாணவன்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர பாடசாலை மாணவன்

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram