சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

மிதிபலகையில் நின்று பயணம் செய்த பெண் : தவறி விழுந்து உயிரிழப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம் – நாளை முதல் அமுல்

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொழும்பு – சிலாபம் வீதியில் தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் நேற்று (20 ) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் விசாரணை
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காயமடைந்த ஆண் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram