சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

விபத்துக்குள்ளான மகிந்தவின் வாகனம்: விசாரணை தீவிரம்

பகிர: Facebook WhatsApp X Telegram
விபத்துக்குள்ளான மகிந்தவின் வாகனம்: விசாரணை தீவிரம்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றைய தினம் (28) மகிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் குருநாகல் – யக்கஹாபிட்டிய வெளியேறும் வீதியினை கடந்து செல்லும் போது பாதுகாப்பு முனையத்தில் உள்ள தடுப்பு படலை வாகனம் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் கவனக்குறைவு
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது காவல்துறை மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெளியேறும் வாயிலைக் கடந்தவுடன் மகிந்த ராஜபக்சவின் வாகனம் செல்லும் போது தடுப்பு படலையை(Gate) ஊழியர் இறக்கிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணையை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவரை காவலில் தடுத்து வைத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள பணியாற்றும் சில ஊழியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணித்த போது இந்த தடுப்புச்சுவர் வாகனத்தின் கண்ணாடி மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram